பயணமே இலக்கு – அன்டியன் நிலப் பயணக் குறிப்புகள் – பகுதி 1

பயணமே இலக்கு – அன்டியன் நிலப் பயணக் குறிப்புகள் – பகுதி ஒன்று 1992 ளில் சைனிங் பாத் (Shining Path ) தலைவர் (Abimael Guzmán,) கைது செய்யப்பட்டபோது அவரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு வீதியில் என்எஸ்எஸ்பி (தோழர்களுடன் அன்று) நண்பர்களுடன் போராடியதாகவும் நினைவு. இவ்வாறுதான் இந்த நாட்டின் அறிமுகம் கிடைத்தது. அறுபதிகளில் கம்யூனிசக் கட்சியை உருவாக்கி அதன் வெகுஜன அமைப்பாக சைனிங் பாத் என்ற இயக்கத்தை உருவாக்கினார். வழமைபோல உலக நாடுகள் இவரையும் இயக்கத்தையும் … Continue reading பயணமே இலக்கு – அன்டியன் நிலப் பயணக் குறிப்புகள் – பகுதி 1

பயணமே இலக்கு – அன்டியன் அனுபவக் குறிப்புகள் – பகுதி 2

பயணமே இலக்கு – அன்டியன் பயண அனுபவக் குறிப்புகள் – பகுதி 2 லீமா (505 feet (154 meters) - (1,312 feet (400 meters) நாட்டின் தலைநகர் லீமாவில் விமானம் இறங்க எந்தப் பிரச்சனையில்லாது அதன் எல்லையினுள் நூழைந்தோம். பணிவான மனிதர்கள் பண்பான உதவிகள். அதிகாலை என்பதால் தங்குமிடத்தினரே நம்மை அழைத்துச் செல்ல கோரியிருந்தோம். ஆகவே சாரதி வந்திருந்தார். மீராபிளோஸ் என்ற இடத்தில் தான் பெரும்பாலும் உல்லாசப் பயணிகள் தங்குகின்றனர். இது பாதுகாப்பான இடம் எனக் … Continue reading பயணமே இலக்கு – அன்டியன் அனுபவக் குறிப்புகள் – பகுதி 2

வியட்நாம்: வடக்கு நோக்கிப் பயணம் – பகுதி இரண்டு

வியட்நாம்: வடக்கு நோக்கிப் பயணம் பகுதி இரண்டு போரின் சாட்சிகளும் வடுக்களும் ஹோசிமின் நகரில் ஹோசிமினின் வாழ்க்கை வரலாற்று நூலையும் ஜென்ரல் கியாப்பின் நினைவுக் குறிப்புகள் நூல் ஒன்றையும் வாங்கினேன். தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் பொழுது வாசிப்பது நல்ல அனுபவமாக இருக்கும் என உணர்ந்தேன். ஹோசிமினின் நூல் வழமையான தலைவர்களைப் புகழும் நூல். இருப்பினும் தகவல்களுக்காக வாசிப்பது பிடித்திருந்தது. ஜென்ரல் கியாப்பின் நூல் இராணுவ நலன்களுடன் இணைந்த செயற்பாட்டு அனுபவப் பகிர்வு. ஆனால் வாசிக்கும் ஆவலைத் … Continue reading வியட்நாம்: வடக்கு நோக்கிப் பயணம் – பகுதி இரண்டு

வியட்நாம்: ஹோசிமின் கடவுளானார்! மக்கள்.? – பகுதி 1

வியட்நாம்:  தெற்கிலிருந்து வடக்கு நோக்கி... ஹோசிமின் கடவுளானார்! ஏழைகளாயினர் மக்கள்? வியட்நாம் என்றவுடன் நம் மனதில் உடனடியாகத் தோன்றும் எண்ணங்கள் சில உள்ளன. முதலாவது ஹோசிமின், இரண்டாவது ஜெனரல் கியாப் மூன்றவாது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் அழிப்புக்கும் எதிரான போராட்டம் என்பன நினைவில் வருவதை தவிர்க்க முடியாது. சிலருக்கு இதன் வரிசை மாறலாம். சிலருக்கு மூன்றாவது மட்டுமே நினைவுக்கு வரலாம்.  இவ்வாறான நாடுகளுக்கு செல்லும் பொழுது எனக்கு தனிப்பட சில நோக்கங்கள் இருக்கின்றன. ஆனால் அதை வெளிப்படையாக அறிய … Continue reading வியட்நாம்: ஹோசிமின் கடவுளானார்! மக்கள்.? – பகுதி 1

அங்கோர்: சிறிய சுற்றில் ஒரு பயணம் – 3

அங்கோர் கோயில்களை பார்ப்பதற்காக இரண்டாம் நாள் சிறிய சுற்றிலும் நான்காம் நாள் தூர இடங்களுக்கும் பயணம் செய்த பதிவு இது. இரண்டாம் நாள் துவிச்சக்கர வண்டியில் மிதித்துக் கொண்டு வடக்கு நோக்கி பயணமானோம். இன்று நாம் சிறிய சுற்றில் பயணிப்பதாக முடிவு செய்தோம். போகும் வழியில் ஒரு பேக்கரியில் (வெதுப்பகம்) பாண் வாங்கி சாப்பிட்டுவிட்டு மதிய சாப்பாட்டிற்கும் சேமித்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். வழி முழுவது இருந்த உயர்ந்த அடர்ந்த மரங்கள் நிழல் தந்து வெய்யிலின் அகோரத்தைக் … Continue reading அங்கோர்: சிறிய சுற்றில் ஒரு பயணம் – 3

அங்கோர்: பெரிய சுற்றில் ஒரு பயணம்

அங்கோர் கோயில்களை நன்றாகப் பார்ப்பதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் மூன்று நாட்கள் போதாது. ஆனால் நமது வசதிக்கு மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டுகளைப் பெற்றோம். மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கும் வாங்கலாம் அல்லது ஒரு வாரத்தில் மூன்று நாட்களைத் தெரிவு செய்து பார்ப்பதற்கும் வாங்கலாம். எங்களது தெரிவு இரண்டாவது. முதல் நாள் கம்போடியா டுட்டுக் (மோட்டார் சைக்கிளில் நாம் இருப்பதற்கு அழங்கரிக்கப்பட்ட வண்டியை இணைத்திருப்பார்கள்) ஒன்றை வாடகைக்கு அமர்த்தி முழு நாளும் மாபெரும் சுற்றில் பயணம் செய்தோம். … Continue reading அங்கோர்: பெரிய சுற்றில் ஒரு பயணம்

அங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம் -1

அங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம் அங்கோர் ஒரு கோயில் அல்ல பல கோயில்களின் கூடாரம் அங்குர் வாட் (Angkor Wat) தொடர்பான அறிமுகம் எப்படி எப்பொழுது கிடைத்தது என நினைவில்லை. இக் காலங்களில் இவ்வாறான பழங்கால விடயங்கள் மட்டுமல்ல புதிய விடையங்களையும் அறிந்து கொள்வது என்பது மிக இலகுவானது. ஆனால் அது தரும் தகவல்கள் எந்தளவு உண்மையானது என்பது எப்பொழுதுமே கேள்விக்கிடமானது. அப்படித்தான் அங்கோர் வாட் தொடர்பாக கிடைத்த தகவல்களும் இருந்தன. உதாரணமாக இது சேர சோழ பாண்டியர்கள் … Continue reading அங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம் -1

கம்போடியா : கற்றது என்ன?

கம்போடியா : படுகொலை - கற்றது என்ன? ஒரு நாட்டிற்கு தரைமார்க்கமாக செல்வது என்பது விமானப் பயணத்தினுடாக செல்வதைவிட அதிக அனுபவங்களைத் தரவல்லது. முதன் முதலாக 2001ம் ஆண்டு இந்தியாவின் கோரப்பூர் எல்லையினுடாக நேபாளத்திற்கு சென்றது முதல், அமெரிக்க கனேடிய எல்லை மற்றும் மேற்கைரோப்பிய நாடுகளின் எல்லைகள் பலவற்றைக் கடந்தமை பல அனுபவங்களைத் தந்தது. இந்த முறைப் பயணத்தில் ஸ்பெயினிலிருந்து மொரக்கோவிற்கும் கிரிஸிலிருந்து துருக்கிக்கும் பின்லாந்திலிருந்து இரசியாவிற்கும் தாய்லாந்திலிருந்து கம்போடியாவிற்கும் கம்போடியாவிலிருந்து வியட்நாமிக்கும் சென்றமை பல அனுபவங்களைத் … Continue reading கம்போடியா : கற்றது என்ன?

போதிகாயா முதல் குசிநகர்வரை : சித்தாத்தர் நடந்த பாதைகளில்…. பகுதி இரண்டு

போதிகாயா முதல் குசிநகர்வரை : சித்தாத்தர் நடந்த பாதைகளில்.... இம் முறை நம் இந்தியப் பயணத்தில் புத்தர் என்ற கௌதம சித்தாத்தர் நடந்த, வாழ்ந்த இடங்களைப் பார்ப்பதும் அதில் நடந்து திரிவதும் தியானிப்பதும் என முடிவெடுத்தோம். முடிவுகள் எடுப்பது இலகு. ஆனால் அதை நிறைவேற்றுவது என்பது கடினமானது. அதுவும் இந்தியாவில் மிகவும் கடினமானது. இருப்பினும் திட்டங்களைத் தீட்டி பயணத்தை ஆரம்பித்து தவறுகளை விட்டு அதிலிருந்து கற்று நமது நோக்கத்தை நிறைவேற்றினோம். காயாவில் இறங்கி போதிகாயாவில் ஆரம்பித்த நமது … Continue reading போதிகாயா முதல் குசிநகர்வரை : சித்தாத்தர் நடந்த பாதைகளில்…. பகுதி இரண்டு

நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்களில் ஒன்று

நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்களில் ஒன்று பட்னாவிலிருந்து 72 கி.மீ தூரத்திலுள்ள பழங்கால நாலந்தா பல்கலைக்கழகத்தின் அகழ்வாராச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றோம். (இந்த இடத்திற்கு போதிகாயாவிலிருந்து செல்ல 50 கீ.மீ).  நாலந்தா பிரதேசத்தை நெருங்க பாதையின் இரு மருங்கிலும் உயர்ந்த மரங்கள் வளர்ந்திருக்க சோலையாக காட்சியளித்தது. இது வெய்யிலின் உக்கிரத்தை குறைத்தது. நாலந்தாவின் வாசல் ஒரு கொண்டாட்டத்திற்கு உரிய இடமாக இருந்தது.  மரங்கள் வளர்ந்து குளிர்மை தரும் சூழலில் பல்வேறு நாட்டவர்களையும் காண்டோம். குறிப்பாக சிறிலங்கா பௌத்த … Continue reading நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்களில் ஒன்று