பின்லாந்து – இரசியாவின் வாசல்

பின்லாந்து – இரசியாவின் வாசல் பின்லாந்திற்கு (finland) காலை எட்டு மணிக்கு விமானத்தில் வந்து சேர்ந்தோம். நோர்வேஜியன் விமானம் மிகவும் மலிவாக பயணச் சீட்டு கிடைத்தது. குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டிருப்பின் பயணச் சீட்டை மிக மலிவாக வாங்கலாம். ஐரோப்பாவிற்குள் நோர்வேஜியன், ரையன் ஏயார் போன்ற சில விமானங்கள் முன்கூட்டி பதிவு செய்தால் மிக மலிவாக பயணச் சீட்டுகளை தருகின்றார்கள். இல்லாவிடினும் மற்ற விமானங்களுக்கான விலைகளுடன் ஒப்பிடும் பொழுது மலிவானது. விமான நிலையத்திலிருந்து  புகையிரதமும் … Continue reading பின்லாந்து – இரசியாவின் வாசல்

50 வது நாள்: ஸ்டொக்லமிலிருந்து ஹெல்சிங் நகருக்கு…

50 வது நாள்:  ஸ்டொலொக்மிலிருந்து ஹெல்சிங் நகருக்கு... நாம் தங்கியிருந்த சுவீடன் கிராமத்திலிருந்து (skinnskatteberg) அங்கு சந்தித்த சுவீடன் நாட்டவருடன் அவரது காரில் ஸ்டொக்லம் (Stockholm) பயணமானோம். இவர் ஒரு பயணி. மாலை ஏறுபவர். நமக்கு கற்றுத்தந்த மொழியில் “பீத்தப்பறங்கி”. தான் ஸ்டொக்லோம் செல்வதாகவும் எம்மை ஏற்றிச்செல்வதாகவும் அவரே சொன்னார். இவர் சுவீடனில் பிறந்த போதும் அமெரிக்காவில் சில காலம் வாழ்ந்தவர். இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் செய்பவர். இலங்கைக்கும் இரண்டு தரம் பயணம் செய்துள்ளார். அவரை நான் … Continue reading 50 வது நாள்: ஸ்டொக்லமிலிருந்து ஹெல்சிங் நகருக்கு…

12ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல்

8ம் நாள் - தான்ஜீர்: மொரக்கோவின் வாசல் தான்ஜீரில் பழைய ரீயாட் (Riyad) ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிய இடம் ஒன்றில் தங்கினோம். மிகச் சிறிய அறை. ஒரு ஈரோ 10 டினார்கள். ஒரு கனேடியன் டொலர் 7 டினார்கள். இலங்கை இந்தியாவை விட பண மதிப்பு கூடிய நாடு. இருப்பினும் ஐரோப்பாவின் விடுதி விலைகளுக்கு சரிசமனாகவே இங்கு அறவீடுகின்றார்கள். நாம் எதிர்பார்த்ததைவிட விடுதி விலைகள் அதிகம். ஆனால் மரக்கறிகள் மிக மலிவு. சமைத்து சாப்பிட இடமில்லாதது … Continue reading 12ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல்

சுவிடன்: கம்யூன் வாழ்வு-பகுதி இரண்டு

சுவிடன்: கம்யூன் வாழ்வு அல்லது கூட்டுச் செயற்பாடு - பகுதி இரண்டு நான் ஒரு சர்வதேசி சுவிடனில் ஒரு சிறு கிராமத்தில் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது இந்த வேலையை வெறுமனே கடைமைக்காக செய்வதா அல்லது நமது வீட்டுத் தோட்டத்தில் செய்வதுபோல மனம் ஒன்றித்து வேலை செய்வதா என சிந்தனை ஓடியது. மனித மனம் ஏமாற்றவே கூறும். ஆனால் எனது வீட்டில் எப்படி செய்வேனோ அப்படி செய்வதுதான் பொருத்தமானதும் சரியானதும் என என் அறிவு உள்ளுணர்வு … Continue reading சுவிடன்: கம்யூன் வாழ்வு-பகுதி இரண்டு

சுவிடன்: சாப்பாட்டிற்காக வேலை- பகுதி ஒன்று

சுவிடன்: சாப்பாட்டிற்காக வேலை நமது பயணம் ஆரம்பித்த நாளிலிருந்து முதல் ஒரு மாதமும் காலையில் எழுந்தால் இரவு பத்து மணிக்குப் பின்புதான் அறைக்கு வந்து படுக்கப் போவோம். அதுவரை நடை ... நடை... நடை. நான் ஒரளவு நடக்கக்கூடியவன். விரைவில் களைக்க மாட்டேன். களைத்தாலும் நடப்பேன். அப்படியான நானே "இனி நடக்க முடியாது" எனக் கூறுமளவிற்கு நடப்போம். இடங்களைப் பார்ப்பதற்கும் சாப்பிடுவதற்கும்.... பின் இடங்கள் தெரியாமல் அலைவது என நமது நடை தொடரும். சுவிடனில் சாப்பாட்டிற்கும் தங்குமிடத்திற்காகவும் … Continue reading சுவிடன்: சாப்பாட்டிற்காக வேலை- பகுதி ஒன்று

5ம் நாள் – ஸ்பெயின் – மலக்கா மக்களின் நகரம்

5ம் நாள் - ஸ்பெயின் – மலக்கா மக்களின் நகரம் முதன் முதலாக எந்த ஒரு நாட்டிற்குப் போகும் பொழுது எப்பொழுதும் ஒரு பயம் தயக்கம் இருக்கும். புரியாத மொழி தெரியாத மனிதர்கள். பரிட்சயமில்லாத இடம். இருப்பினும் ஒவ்வொரு முறையும் புதிய ஒரு நாட்டிற்கு பயணம் செய்ய தயங்கியதில்லை. அப்படித்தான் இலன்டனிலிருந்து ஸ்பெயினுக்கான நமது பயணம் ஆரம்பமானது. இரவு 11.30 மணிக்கு ஸ்பெயின் குடிவரவு அதிகாரிகள் சிரித்த முகத்துடன் வரவேற்க வெளியே வந்தோம். மலக்கா விமான நிலையத்திலிருந்து … Continue reading 5ம் நாள் – ஸ்பெயின் – மலக்கா மக்களின் நகரம்

நோர்வேயில் நான்கு நாட்கள்

ஸ்பெயினிலிருந்து நோர்வேக்குப் பயணமானோம். நாம் வருவது நோர்வேக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ நன்றாக மழை பெய்தது. மப்பும் மந்தாரமுமாகவே இருந்தது. நோர்வேயில் நம்மை அழைத்துச் செல்ல (தங்கையின் கணவரின்) உறவினர் ஒருவர் வந்ததினாலும் அவர் வீட்டில் தங்கியதாலும் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன. கத்திரிக்காய் பிரட்டல் மற்றும் பருப்புக் கறியுடன் நல்ல தமிழ் சாப்பாடு. வயிறு நிறைய நன்றாக சாப்பிட்டோம். நோர்வே வந்தவுடன் சஞ்சயன் தன்னை அழைக்கும் படி கூறியிருந்தார். மதிய சாப்பாட்டின் பின் அவரை அழைத்தேன். அவர் தனக்கு … Continue reading நோர்வேயில் நான்கு நாட்கள்