இரசியா: மீண்டும் பழமையை நோக்கி…

இரசியப் புரட்சி: விதைகளும் வினைகளும் இரசியப் புரட்சி தொடர்பாக நூல்கள் ஊடாக நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல தகவல்களை அறிந்துள்ளோம். இருப்பினும் சோவியத்யூனியன் உடையும் மட்டும் அது நம்மில் ஏற்படுத்திய தாக்கம் நம்பிக்கை அளப்பரியது. ஆகவே சோவியத்துக்களின் வாழ்வை பார்ப்பது ஒரு கனவாக இருந்தது. இன்று சோவியத்துக்கள் இல்லை. இரசியா என்ற கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. ஒபாமாவில் விருப்பம் இருந்தபோதும் பூட்டினைப் பிடிக்காதபோதும் இரசியாவா?அமெரிக்காவா? என நாம் தெரிவு செய்யும் பொழுது சில காரணங்களுக்காக இரசியாவை தெரிவு செய்வதும் … Continue reading இரசியா: மீண்டும் பழமையை நோக்கி…

Advertisements

தூருக்கி: கொன்யா…ரூமி… சுழற்சினுடாக நம்மை அறிதல்

மௌலானா ரூமி... சுழற்சினுடாக நம்மை அறிதல் நாம் பாமாக்கலே பாறைகளைப் பார்த்த்துவிட்டு டெனிசிலி வந்து அங்கிருந்து பஸ்சில் ஏழு மணித்தியாலங்கள் பயணம் செய்து கொன்யா (Konya) நகரை வந்தடைந்தோம். இங்கு வந்து இறங்கிய போது குளிர ஆரம்பித்தது. நீண்ட நாட்களுக்குப் பின்பு குளிரை அனுபவிக்கின்றோம். கொன்யாவில் பிரதான பஸ் நிலையம் நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது. நாம் செல்ல வேண்டிய இடம் மௌலான நகரம். எப்படிப் போவது என ஒரு கடையில் கேட்டபோது அவர்கள் சந்திக்குச் சென்று பஸ் … Continue reading தூருக்கி: கொன்யா…ரூமி… சுழற்சினுடாக நம்மை அறிதல்

தூருக்கி: சிதைவுறும் கற்பிதங்கள்

கிரேக்கத்தின் தீவுகளின் ஒன்றான லெவோஸில்(Lesvos) இருந்து தூருக்கி நோக்கி சிறிய கப்பலில் பயணமானோம். இந்தத் தீவும் பயணம் செய்த கடலும் கடந்த வருடம் ஆயிரக்கணக்கில் வந்த சீரிய அகதிகளையும் கடலில் மாண்ட குழந்தைகளையும் நினைவுபடுத்தின. கப்பலை மோதிய அலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகங்களாக தோன்றின. இப்பொழுது அகதிகள் கட்டுப்படுத்தப்பட்டதால் பெருமளவில் அகதிகள் வருவதில்லை என அறிந்தோம். மாலை ஆறு மணிக்கு லெவோஸிலின் மிதிலினி(Mitilini) நகரிலிருந்து இரண்டு கப்பல்கள் வெளிக்கிட்டன. ஒரு கப்பல் ஆறு ஈரோக்கள். மற்றக் கப்பல் … Continue reading தூருக்கி: சிதைவுறும் கற்பிதங்கள்

Nude is not just nudity but Nirvana

Sun is nude Moon is nude Earth is nude Ocean is nude Sea is nude Water fall is nude Rain is nude Mountain is nude Forest is nude Tree is nude Leaf is nude Flower is nude Nude is freedom Freedom is beautiful **** Everything is nude except human. human are enjoying the nudity of … Continue reading Nude is not just nudity but Nirvana

இத்தாலியில் இலங்கைப் பெண்

இன்று இத்தாலியின் தஸ்கான் மாகாணத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறிய பழைய நகரான சியான பஸ் நிலையத்தில் காத்திருந்தோம். ஒரு பெண் எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு வந்தார். அவரது தோல் எங்களின் நிறமாகவே இருந்தது. அவரைப் பார்ப்பதற்கும் இலங்கையர் போல இருந்தார். நீங்களும் இலங்கையா எனக் கேட்டோம். அவர் ஆம் என்றார். நாமும் இலங்கை என்றோம். நீங்கள் இலங்கையில் எவடம் என்று கேட்டோம். அவரும் கேட்டார். எங்கட வீட்டிற்கு வாங்கோவன். சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றார். இல்ல … Continue reading இத்தாலியில் இலங்கைப் பெண்

இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி இரண்டு

டொல்ஸ்டோய் இறுதியாக வாழ்ந்த வீடு மாஸ்கோவில் கோர்க்கிப் பூந்தோட்டம் இருக்கின்ற இடத்தில் உள்ள மாஸ்கோ நதிக்கு அப்பால் இருக்கின்றது. ஒரு சிறிய வீதியால் நடந்து உயர்ந்த மரங்கள் இருந்த ஒரு சோலைக்குள் செல்ல வேண்டும். அங்கு இரண்டு மாடிக் கட்டிட வீடு ஒன்று உள்ளது. நாம் உள்ளே செல்வதற்கான பணத்தைக் கட்டிவிட்டு பார்ப்பதற்குச் சென்றோம். இந்த வீட்டை புனர்நிர்மாணம் செய்யும் வரை தற்காலிகமாக சிறியதொரு வீ்ட்டைக் கட்டி வாழ்ந்தார். அந்த வீடு அந்தக் காணியின் ஓரத்தில் இருந்தது. … Continue reading இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி இரண்டு

இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி ஒன்று

இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி ஒன்று படைப்(பாளிகள்)புகள் விதைத்த அன்பு! இரசியாவில் நாம் கட்டிடங்களைப் பார்ப்பதற்கு அதிகம் முக்கியத்துவமளிப்பதில்லை என முடிவு செய்தோம். மாறாக மனிதர்களின் உள்ளே சென்று மேலும் பல விடயங்களை அறிவதில் ஆர்வமாக இருந்தோம். இதற்கு இரசியாவின் இதயங்களுக்குள் நூழைவதே சரியான வழி. இரசியாவில் நடந்த அரசியல் நிகழ்வுகள் (அதை முன்னெடுத்தவர்கள்) நம்மில் (அல்லது என்னில்) ஒரளவு பாதித்ததைப் ஏற்படுத்தின(னார்கள்) என்றால் மிகையல்ல. இதேபோல நம்மைப் பாதித்தவர்கள் இரசிய இலக்கியப் … Continue reading இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி ஒன்று

இரசியா – இரும்புத்திரைக்குள் ஒரு பயணம்

இரசியா – கனவு பூமி- இரும்புத்திரைக்குள் ஒரு பயணம் 1987ம் ஆண்டு உயர்தர பரிட்சை முடிந்தபின் அரசியலில் ஈடுபடுவது என முடிவு செய்து ஈரோசின் மாணவர் இயக்கமான கைசில் இணைந்தேன். இணைந்த காலத்திலிருந்து அங்கிருந்த ஆவணக் காப்பகத்திலுள்ள நூல்களை எடுத்து வாசிப்பதே எனது பிரதான செயற்பாடானது. காலை, மாலை, இரவு என தொடர்ந்து வாசித்த காலங்கள். பெரும்பாலும் இரசிய நாவல்களும் வரலாறுகளும் ஆகும். கார்ல் மார்க்சின் வரலாற்றிலிருந்து லெனினின் வரலாறுவரை கிட்டத்தட்டப் பாடமாக்கியதைப் போன்று வாசித்தேன். மார்க்சிம் … Continue reading இரசியா – இரும்புத்திரைக்குள் ஒரு பயணம்

Sweden: Shambala Gatherings – A Commune life

Sweden: Shambala Gatherings – A Commune life As we all know, Scandinavian countries are very expensive to travel to, so we decided to work for our food and lodging. It is a better way to manage our budget as well, as a great way to meet people and learn their culture and customs.  We looked … Continue reading Sweden: Shambala Gatherings – A Commune life

இரசியா – காட்டில் மீண்டும் பிறந்தோம்

இரசியா – காட்டில் மீண்டும் பிறந்தோம் இரசியாவிற்கு செல்வது என முடிவெடுத்தவுடன் செயின் பீட்டர்ஸ்பேக்கிலும் மாஸ்கோவிலும்  ஒவ்வொரு வாரம் நமது சாப்பாட்டிற்கும் தங்குமிடத்திற்கும் வேலை செய்வோம் என முடிவெடுத்தோம். 2007ம் ஆண்டு இத்தாலியில் சந்தித்த ஒரு இரசிய நண்பருடன் தொடர்பு கொண்டபோது அவர் இரண்டு இடங்களிலும் இருவரின் தொடர்பைத் தந்தார். அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வரலாம் என்று கூறினார்கள். ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க அவர்களிடமிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. இரசியாவைப் பற்றி வாசித்த தகவல்களில் அடிப்படையில் … Continue reading இரசியா – காட்டில் மீண்டும் பிறந்தோம்