அங்கோர்: பெரிய சுற்றில் ஒரு பயணம்

big-circuitஅங்கோர் கோயில்களை நன்றாகப் பார்ப்பதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் மூன்று நாட்கள் போதாது. ஆனால் நமது வசதிக்கு மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டுகளைப் பெற்றோம். மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கும் வாங்கலாம் அல்லது ஒரு வாரத்தில் மூன்று நாட்களைத் தெரிவு செய்து பார்ப்பதற்கும் வாங்கலாம். எங்களது தெரிவு இரண்டாவது.

முதல் நாள் கம்போடியா டுட்டுக் (மோட்டார் சைக்கிளில் நாம் இருப்பதற்கு அழங்கரிக்கப்பட்ட வண்டியை இணைத்திருப்பார்கள்) ஒன்றை வாடகைக்கு அமர்த்தி முழு நாளும் மாபெரும் சுற்றில் பயணம் செய்தோம். img_1357சியாம் ரெப் நகரிலிருந்து (Siem Reap)  ஆரம்பித்த பயணம் வட கிழக்கு நோக்கி சென்றது. போகும் வழியில் அனுமதிச் சீட்டுகளை வாங்கிக் கொண்டோம். முதலாவதாக உயர்ந்த மரங்களிக்கிடையில் சென்ற செம்மண் பாதைகளினுடாக பிரசாட் கிரவன் (Prasat Kravan) என்ற கோயிலுக்குச் சென்றோம். இக் கோயிலை  முதலாவது ஹர்சவர்மன்  10ம் நூற்றாண்டில் விஸ்ணுவிற்கு கட்டியுள்ளார். ஐந்து கோபுரங்களை வரிசையாக கொண்ட இக் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை.

பான்டியே கேடய் (Banteay Kdei)  

img_1377இங்கிவிருந்து வடக்கு நோக்கி பயணித்து வீதியின் மேற்குப் பக்கமிருந்த  பான்டியே கேடய் (Banteay Kdei) என்ற கோயிலை பார்த்தோம். கோயிலின் கிழக்கு வாசலிலிருந்த உடைந்த உயர்ந்த கோபுரத்தினுடாக உள்ளே நூழைந்தோம். அடர்ந்த மரங்கள் இருந்த பாதையின் ஒரு முலையில் கண்ணிவெடிகளால் அவயங்களை இழந்தவர்கள் இசை நிகழ்வை நடாத்திக் கொண்டிருந்தார்கள். பலர் இவர்களுக்கு பண அன்பளிப்பு செய்தனர். இவ்வாறு எல்லாக் கோவில்களைில் வாசல்களிலும் இவர்கள் இதைச் செய்கின்றார்கள். அழகான அமைதியான இசை இவர்களின் வாழ்வாதாரமாக இருக்கின்றது. இவற்றைக் கடந்து சிறிது தூரம் நடந்து செல்ல கோயில் வருகின்றது.

img_1427பான்டியே கேடய் (Banteay Kdei)  கோயில் ஒரே தளத்தில் உள்ளது.  கோயிலின் வாசலின் முன்னால் நாகமும் சிங்கமும் மூன்று பக்க படிக்கட்டுகளில் வரவேற்க ஒரு முத்தம் உள்ளது. இந்த இடம் “தேவதாசிகள்” நடனமாடும் இடம். இக் கோயிலும் கோபுரமும் கற்களால் அடுக்கப்பட்டு கட்டப்பட்டிருந்ததுடன் மூன்று வகையான கற்களையும் பயன்படுத்தியுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது. உள்ளே புத்தர் இருந்தார். மூலஸ்தானங்களிலிருந்த (சிவ)லிங்கங்கள் அகற்றப்பட்டிருந்தன. ஏதோ ஒரு கோயிலின் லிங்கத்தின் அடியில் வைரங்களை யாரோ கண்டுபிடிக்க அனைத்து லிங்கங்களும் தோண்டப்பட்டு காணாமல் போனதாக குறிப்பிடுகின்றார்கள். யோனிகள் மட்டும் தனித்திருக்கின்றன. பல கோயில்களை இந்த நிலையைக் காணக்கூடியதாக உள்ளது. இக் கோயிலை 12ம் 13ம் நூற்றாண்டுகளில் ஏழாவது ஜெயவர்மனும் இரண்டாவது இந்திரவர்மனும் கட்டியுள்ளனர். இது கிட்டத்தட்ட  டா புரோம் (Ta Prohm) மற்றும் பிரேயா கான் (Preah Khan) என்பவற்றின் சிறிய வடிவம் என்கின்றனர்.  இருப்பினும் எங்களுக்கு இது பெரிதாகவே தோன்றியது. இக் கோயிலுக்கு மேற்குப் பக்கமும் கோபுரத்துடன் வாசல் உள்ளது.

சிராஸ் சிராங் (Sras Srang)  

img_1478நாம் மீளவும் கிழக்குப் பக்க வாசலால் வெளியே வந்து அதற்கு முன்னால் இருந்த சிராஸ் சிராங் என்ற பழங்கால கேணியைப் (Sras Srang) பார்த்தோம். பெரிய கேணி. ஈழத்திலுள்ள கோவில்களிலிருந்து கேணிகளை நினைவுபடுத்தின. இது 10ம் நூற்றாண்டில் ராஜேந்திரவர்மனால் கட்டப்பட்டு 13ம் நூற்றாண்டில் ஏழவாது ஜெயவர்மனால் மீளக் கட்டப்பட்டுள்ளது. ஒன்பது நூற்றாண்டுகளாக இந்த நீர் சேமிக்கப்பட்டுள்ளது. அல்லது வற்றாது இருக்கின்றது. மிகவும் இரம்மியமான இடம். சுற்றிவர மரங்கள் இருக்க வீசும் காற்று நீரில் நனைந்து நம் சூட்டைத் தனித்து குளர்மையாக்கின. களைப்பு நீங்கினாலும் மதியம் பசிக்க ஆரம்பித்தது. சிறிய பெட்டிக்கடைகளில் சாப்பிட சிறிது தயக்கம். தூர கிழக்காசிய நாடுகளின் சாப்பாடுகள் தொடர்பாக தனியான ஒரு பதிவு எழுத வேண்டும். ஆகவே இளநீர் ஒன்றை வாங்கிக் குடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

பிரி ருப் (Pre Rup)

img_1498கேணிக்கும் கோயிலுக்கும் இடையிலுள்ள வீதியால் வடக்கு நோக்கி பயணித்து டி(T) போன்ற சந்தியில் கிழக்கு நோக்கி சென்றோம். வீதியின் வளைவில் பிரி ருப் (Pre Rup) என்ற கோயிலைப் பார்த்தோம்.  பெரிய சுற்று மதிலையும்  உள்ளே மூன்று தளங்களையும் கொண்ட பிரி ருப் (Pre Rup) கோயிலை 10ம் நூற்றாண்டில் ராஜேந்திரவர்மன் கட்டினார். இதைக் கட்ட மூன்று வகையான கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேல் தளத்தில் பிரம்மா, இலச்சுமி, விஸ்ணு, உமா மற்றும் சிவா ஆகியோரின் சிலைகளைக் கொண்ட ஐந்து கோபுரங்கள் உள்ள இக் கோயிலை மலைக் கோயில் என்கின்றனர்.  இதன் ஒவ்வொரு தளங்களுக்கும் கோபுரங்களுக்கும் ஏறுவது சவாலானது. சில கோபுரங்களுக்கு ஏறுவதை தடைசெய்துள்ளார்கள். இது சைவர்களின் ஆசிரமம் என்றும் கூறுகின்றார்கள்.

கிழக்கு மீபோன் (East Mebon)

img_1553வடக்கு நோக்கி மரங்கள் நிறைந்த செம்மண் பாதையில் பயணித்து கிழக்கு மீபோன் (East Mebon) கோயிலைப் பார்த்தோம்.  இதனை 10ம் நூற்றாண்டில் ராஜேந்திரவர்மன் கட்டினார். இதைக் கட்டிய காலத்தில் இந்த நகருக்கான நீர் வழங்கும் குளத்தில் நடுவில் கட்டியுள்ளார்கள். கிட்டத்தட்ட55 மில்லியன் சதுர மீட்டர் அளவு நீரைக் கொண்டிருந்தது. இப்பொழுது இந்த நிலம் நீரின்றி காய்ந்துள்ளது.  நான்கு வகையான மதில்களைக் கொண்ட இது ஒரே தளத்தில் உள்ளது. வெளி மதிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலிலும் நடுவில் வாசல்கள் இருக்க அதன் இரு பக்கங்களிலும் சிங்கங்களின் சிலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மதில் முலைகளில் யானை சிலைகள் உள்ளன. நடுவிலுள்ள சுற்றுமதிலினுள் ஐந்து கடவுள்களுக்குரிய கோபுரங்கள் உள்ளன.

டா சோம் (Ta Som)

img_1613வடமேற்காக பயணம் செய்ய டா சோம் (Ta Som) என்ற கோயில் உள்ளது.  இது 12ம் நூற்றாண்டில் ஏழாவது ஜெயவர்மனால் கட்டப்பட்டு 13ம் நூற்றாண்டில் இரண்டாவது இந்திரவர்மனால் பெருப்பிக்கப்பட்டது. இது டா போனோம் அல்லது பாண்டே கேடைய் என்பவற்றின் சிறிய மாதிரி வடிவம் என்கின்றனர். இது ஒரே தளத்திலுள்ள சிறிய கோயில். இரண்டு சுற்று மதில்களையும் அதற்கிடையில் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களுக்கு கால்வாய்களையும் கொண்டுள்ளதுடன் மேற்கு மற்றும் கிழக்குப் பக்கங்களில் வாசல்கள் கோபுரங்களுடன் உள்ளன. கிழக்குப் பக்கத்திலுள்ள கோபுரம் மரம் வளர்ந்து வேர்களால் சூழப்பட்டுள்ளது. இப் பாதை பயன்பாட்டில் இல்லை.  இரண்டாவது சுற்று மதிலினுள் நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளிலும் நடுவில் ஒரு கோபுரமும் உள்ளன. பின் மேற்கு நோக்கிப் பயணித்து வழியிலிருந்து ஒரு கடையில் வேறு வழியில்லாமல் ஒருவாறு மதிய உணவை முடித்தோம்.

நியாக் போன் (Neak Pean)

img_1678நியாக் போன் (Neak Poan) என்ற கேணிக்கு உள்ளே இருந்த கோயிலைப் பார்த்தோம். இது நீரேரியின் நடுவில்  உள்ளது. இந்த நீரேரியில் உயர்ந்த மரங்களும் பட்ட மரங்களும் இருப்பது போரில் குண்டுகள் விழுந்து அழிந்த தேசம் போல காட்சியளித்தது.  நீரேரியைக் கடப்பதற்கு மரங்களால் கட்டப்பட்ட சிறிய நடைபாதை உள்ளது. அதில் நடந்து நடுவிலுள்ள தீவிற்கு சென்றால் சிறிய கோவில் ஒன்று குளம் ஒன்றில் நடுவில் உள்ளது. இமைய மலையிலுள்ள ஆனவத்பத்தா (Anavatapta) நதியைப் போன்ற இக் கோயிலை ஏழாம் ஜெயவர்மன் 12ம் நூற்றாண்டில் கட்டினார். இந்தக் குளத்தைச் சுற்றி நான்கு சிறிய குளங்கள் உள்ளன. இந்த நான்கு குளங்களிலிருந்தும் சிங்கம், யானை, குதிரை, மற்றும் பசு ஆகியவற்றின் வாய்களிலிருந்து பெரிய குளத்திற்கான தண்ணீர் வருவதாக நம்பப்படுகின்றது. பௌத்த குறியீடான இது பிற்காலத்தில் வந்தது எனவும் ஆரம்பத்தில் இது ஒரு இந்துக் கோயிலாக இருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பேரா கான்(Preah Khan)

img_1742மேற்கு நோக்கி தொடர்ந்து பயணித்து பிரேயா கான் (Preah Khan) என்ற கோயிலின் கிழக்கு வாசலில் இறங்கினோம்.  ஏழாம் ஜெயவர்மனால் 12ம் நூற்றாண்டில் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய திட்டம் எட்டாம் ஜெயவர்மனால் மாற்றங்கள் செய்து முடிக்கப்பட்டது. பெரிய மதில் சுவருடன் நான்கு பக்கமும் வாசல்கள் உள்ளன.. அதனுள் நான்கு முலைகளிலும் சிறிய குளங்கள் இருக்க நடுவில்  நான்கு பக்க வாசல்களிலும் அசுரர்களும் தேவர்களும் பாம்புடன் இருக்கின்றார்கள். கிழக்கு வாசலில் மூன்று கோவாசல்கள் கோபுரங்களுடன் இருக்கின்றன. அதைக் கடந்து காட்டுப் பாதையினுடாக நடக்க கல்லினால் கட்டப்பட்ட மேடை வரும். இது தேவதாசிகள் நடனமாடும் இடம். இதன் தென்பகுதியிலுன்ன மதில் சுவரின் மேல் மிகப் பெரிய மரம் வளர்ந்து பார்வையாளர்களை கவர்கின்றது. இதனுள் சிறிய சுற்றுச் சுவர் நான்கு கோபுரங்களை கொண்டுள்ளது. img_1781மிகப் பெரிய சிக்கலான கட்டிடத் தொகுதியான இதில் எந்தப் பக்கத்தால் நூழைந்தும் எந்தப் பக்கத்தாலும் வெளியேறலாம். இக் கோயிலிலுள்ள இன்னுமொரு சிறப்பு பழமையான கிரேக்க கட்டிடக் கலையைப் போன்ற இரண்டு மாடிக் கட்டிடம் இருப்பதாகும். அதேவேளை பல பக்கங்கள் சிதைந்து கற்குவியலாகக் காணப்படுகின்றன. இது பௌத்த பல்கலைக்கழக நகரம் எனவும் ஆயிரம் ஆசிரியர்கள் தங்கியிருந்து கற்பித்ததாகவும் கூறுகின்றார்கள். இக் கோயிலை நோக்கிப் போகும் பாதைகள் மட்டுமல்லாமல் கோயிலைச் சுற்றியும் கோயிலினுள்ளும் அடர்ந்த பெரிய மரங்கள் காணப்படுகின்றன. இதன் வேர்கள் கட்டிடங்களை தாங்கும் அளவிற்கும் உறுதியாக இருப்பதுடன் அதன் அழிவுகளுக்கும் காரணமாகின்றன. இவற்றைப் பார்த்துக் கொண்டு மேற்கு வழியால் அசுரர்களுக்கும் தேவர்களும் பாம்புடன் இருபக்கமும் காவல் காக்க வெளியே வந்தோம்.

மாலை 5.30 மணியுடன் அனைத்தும் மூடிவிடுவார்கள். ஆகவே நமது பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் தெற்கு நோக்கிப் பயணத்து  வடக்கு வாசல் ஊடாக,  அங்குவாட் தொம், அங்குவாட் கோயில் ஆகியவற்றுக்கு அருகால் செல்லும் வீதியால் வந்து தெற்கு வாசிலினுடாக தங்குமிடத்தை அடைந்தோம். காலை சாப்பாடு இல்லை. மதியம் நன்றாக சாப்பிடவில்லை. ஆகவே வாய்க்கு இருசியாக நாம் விரும்பியதை சாப்பிட கடையை தேடினோம். கிடைத்தது ஒரு இந்தியன் கடை.

அடுத்தது சிறிய சுற்றும் தூர இடங்களிலுள்ளவையும்

உசாத்துணைகள் – Ancient Angkor by Michael Freeman & Claude Jacques

Lonely Planet – 2014 Travel Guide

Angkor Tour Guide book

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s