நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்களில் ஒன்று

நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்களில் ஒன்று

img_0315பட்னாவிலிருந்து 72 கி.மீ தூரத்திலுள்ள பழங்கால நாலந்தா பல்கலைக்கழகத்தின் அகழ்வாராச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றோம். (இந்த இடத்திற்கு போதிகாயாவிலிருந்து செல்ல 50 கீ.மீ).  நாலந்தா பிரதேசத்தை நெருங்க பாதையின் இரு மருங்கிலும் உயர்ந்த மரங்கள் வளர்ந்திருக்க சோலையாக காட்சியளித்தது. இது வெய்யிலின் உக்கிரத்தை குறைத்தது. நாலந்தாவின் வாசல் ஒரு கொண்டாட்டத்திற்கு உரிய இடமாக இருந்தது.  மரங்கள் வளர்ந்து குளிர்மை தரும் சூழலில் பல்வேறு நாட்டவர்களையும் காண்டோம். குறிப்பாக சிறிலங்கா பௌத்த மக்களை வெள்ளை ஆடைகளுடன்  காணக்கூடியதாக இருந்தது. பாதை ஓரங்களில் இருந்த பெட்டிக் கடைகளில் சிங்கள மொழியில் பிரித் ஓதும் சத்தமும் சிங்களப் பாடல்களும் ஒலித்த வண்ணமிருந்தன.

img_0450

புத்தரின் நினைவு தூபி

மேலும் பலர் சிங்கள மொழியில் சாராளமாக உரையாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் சிங்களவர்களா இந்தியர்களா என அறிவது கஸ்டமான காரியம். அவர்கள் நம்மை சிறிலங்கா எனப் புரிந்து கொண்டு சிங்களத்திலையே உரையாடினார்கள். அந்தளவிற்கு சிங்கள மொழி பயன்படுத்தப்படுகின்றது. இவை அனைத்தும் நாம் ஒரு சிங்கள பௌத்த கிராமத்திலா இருக்கின்றோம் என்ற சந்தேகத்தை உருவாக்கியது. அந்தளவிற்கு சிறிலங்கா அரசின் ஆதரவுடன் சிங்கள மக்களின் ஆக்கிரமிப்பு இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இந்தியாவின் புத்தர் வாழ்ந்த பிரதேசங்களிலும் நடைபெறுகின்றது.img_0317

கௌதம சித்தாத்தரும் ஜென் மத குருவான மாவீரரும்  உண்மையைத் தேடியும் தாம் அறிந்ததைப் பகிரவும் என அலைந்த இடங்களில் ஒன்று நாலந்தா என அறியப்படுகின்றது. இந்த இடத்தில்தான் சித்தாத்தரின் முக்கியமான இரு சீடர்கள் (சரிபுத்தாவும் மொகலாவும்) பிறந்ததுடன் அவரின் சீடராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள்.  இவர்களின் நினைவாக அரசர் அசோகா கட்டிய ஸ்துபியும் (மற்றும் பல்கலைக்கழகமும்?) இங்குள்ளது.  பல சீன கொரிய பயணிகளின் நூல்களிலும் குறிப்புகளிலும் இது தொடர்பான தகவல்கள் இருக்கின்றதாக கூறுகின்றார்கள். img_0321குறிப்பாக ஏழாம் நூற்றாண்டில் பயணித்த சீனப் பயணியும் நாலந்தாவில் மாணவராகவும் ஆசிரியராகவும் ஏழு ஆண்டுகள் இருந்த ஹெயின் தசாங் (Hiuen Tsang) மற்றும் “இந்தியாவில் பௌத்தத்தின் வரலாறு” என்ற நூலை எழுதிய தீபெத்திய மதகுருவின் நூல்களிலும் காணப்படுகின்றன எனக் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் அகழ்வாராச்சிகளில் பின்வரும் சான்றுகளே அதிகம் கிடைத்துள்ளன.

img_0316கி.பி ஐந்தாம் மற்றும் 12ம் நுர்ற்றாண்டுகளில் இந்த இடத்தில் மாபெரும் பௌத்த நூலகம் மற்றும் பல்கலைக்கழகம் ஒன்றை மீள மீள அமைத்துள்ளார்கள். பழைய கட்டிங்களுக்கு மேலாக பல முறை (ஆகக் குறைந்தது மூன்று முறை) மீள கட்டபட்ட அகழ்வாராச்சி சான்றுகள் உள்ளன. ஐந்து தர பத்து சதுர மைல்கள் பிரதேசத்தில் மாணவர்கள் தங்கிக் கற்பதற்கு பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.  இப்பொழுது பதினாங்கு ஹெக்டேக்கர் பரப்பளவு மட்டுமே அகழப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. இவை தங்குமிடவசதி, தியான நிலையம், வகுப்பறைகள், கோயில்கள் என பிரமாண்டமாக கட்டப்பட்டமைக்கு சாட்சிகளாக இருக்கின்றன. ஒரு தகவல் கூறுகின்றது பத்தாயிரம் மாணவர்களும் 2000ம் ஆசிரியர்களும் தங்கியிருந்து கற்றதாகவும் கற்பித்ததாகவும். இன்னுமொரு தகவலோ முப்பதாயிரம் மாணவர்களும் தங்கியிருந்து கற்ககூடிய வசதிகள் இருந்தன என்கின்றது. இவ்வாறான வசதிகளுடன் உலகத்தில் உருவான முதலாவது பல்கலைக்கழம் இது என்கின்றனர். மேலும் கீரிஸ், சீனா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்கள் வந்து தங்கிப் படித்துள்ளனர்.  இவர்களுக்கான அனுமதி வாசலில் நிற்கின்றவர்களின் வாய் மூலமான நேர்காணலினுடாக அறியப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. பலர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அறியக்கிடைக்கின்றது.img_0318

இன்று நாம் அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். போகும் பொழுதே நாலந்தா தொடர்பான சிறிய நூல் ஒன்றை வாங்கினோம். மேலும் பல வழி காட்டிகள் நம்மைப் பின்தொடர்ந்தார்கள். “நீங்கள் தனியாகப் பார்க்க முடியாது. நிறைய விடயங்களை அறிய முடியாது” எனக் கூறிப் பின்தொடர்ந்தார்கள். சிறிய தொகை என்பதால் ஒருவரைத் தெரிவு செய்தோம். அவர் ஆரம்பத்தில் அரை மணித்தியாலங்கள் என்றவர் உள்ளே சென்றவுடன் 15 நிமிடங்களில் தனது வழிகாட்டலை முடித்துவிட்டார். பெரிய பயனில்லை. நாம் வாங்கிய நூல் மற்றும் அங்குள்ள விபரங்களுடன் நாமே பார்த்து புரிந்து கொள்ளக்கூடிய இடம் இது.

img_0324இதை எல்லாம் கடந்து உள்ளே சென்றவுடனையே அந்த இடம் நம்மை ஆனந்தமாக வரவேற்பதாக உணர்ந்தோம். அந்தளவிற்கு அழகாக இருந்தது. நன்றாகப் பராமரிக்கின்றார்கள். பாதையின் இடப் பகுதியில் கௌதம சித்தாத்தர் இங்கு வந்தமைக்கான நினைவு ஸ்துபி ஒன்று இருந்தது. இது இன்னும் முழுமையாக அகழப்படவில்லை. இதைக் கடந்து சென்றபோது பழங்கால நாலந்தா பல்கலைக்கழகத்தின் வாசல் வந்தது.  வாசலைக் கடந்து உள்ளே சென்றபோது ஐந்து அடிக்கும் அதிகமான அகலமான சுவர்களின் இடிபாடுகள் காணப்பட்டன. இப் பாதையினுடாக நடந்து பல்கலைக்கழக வெளியினுள் நூழைந்தபோது அது புதிய ஒரு பரிமாணத்தைக் காட்டியது. பல திசைகளுக்குப் பாதைகள் பிரிந்தன. அச் சந்தியில் தற்போது அகழ்வாரச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளை வரைபடமாக வைத்துள்ளார்கள். நாம் இடது பக்கத்திற்கு திரும்பினோம்.

img_0340

சரிபுத்தா நினைவு தூபி

இடது பக்கம் திரும்பியவுடன் வலது பக்கத்தில் சரிபுத்தாவின் நினைவாக அசோகர் கட்டிய உயரமான நினைவு ஸ்துபி இருந்தது. இதுவே நாலந்தாவின் பழமையான அடையாள சின்னமாகும். இதன் இடது பக்கத்தில் ஆசிரியர்களின் தங்குமிடம் பல தளங்களில் இருந்தது. இவை இரண்டு மட்டுமே இன்னும் ஒரளவாவது சிதையாமல் இருக்கின்றது. மேலும் இந்தப் பல்கலைக்கழகம் ஆறுக்கு மேற்பட்ட பல தளங்களைக் கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரமாகவும் விளங்குகின்றது. img_0323அகலமான செங்கல் சுவர்களுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. கோடை மற்றும் குளிர் காலங்களில்  வெப்பத்தை தனிப்பதற்கும் சூடாக வைத்திருப்பதற்கும் ஏற்றது இது. மேலும் அருகிலிருக்கும் வசதிவிடங்களில் கற்கும் மாணவர்கள் பரஸ்பரம் மற்றவர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் இந்த அகலமான சுவர்கள் பயன்பட்டன என்கின்றார்கள்.img_0348

நாம் மீண்டும் வரைபடம் இருந்த இடத்திற்கு வந்து இப்பொழுது வலது பக்கமாகத் திரும்பிச் சென்றோம்.  இந்த வீதியின் வலது பக்கத்தில் மாணவர்கள் தங்கியிருந்து கற்கும் ஒன்றிலிருந்து பதினொன்றுவரையான இடங்கள் (மடங்கள் – monasteries  ) உள்ளன. இதன் அமைப்புகள் ஒரே மாதிரி இருப்பினும் சிறு சிறு வேறுபாடுகளுடன் தனித்துவமாக விளங்குகின்றன.  பொதுவாக சதுர வடிவமைப்புகளை கொண்டவை. மேற்கு நோக்கிய வாசல்கள். இரு பக்கங்களிலும். மாணவர்களுக்கான மலசல வசதிகளுடன் கூடிய தனித் தனி அறைகள். img_0366சதுர வடிவமைப்பின் நடுவில் பொதுவான கிணரும் அடுப்பும் மற்றும் கற்பிப்பதற்கான பொதுவான மண்டபமும் உள்ளன.  வாசலுக்கு எதிர்ப் புறமாக ஆசிரியர்கள் தங்குமிடம் உள்ளது. மேலும் பொருட்களையும் முக்கியமான ஆவணங்களையும் பாதுகாப்பதற்கான குளிர்சாதன அறைகளும் இரகசிய அறைகளும் இருந்துள்ளன. இதுபோன்று நூறு விடுதிகள் (மடங்கள்) இருந்ததாக கூறப்படுகின்றதுடன் அது தொடர்பான அகழ்வாரச்சிகளும் நடைபெறுகின்றன.

img_0406மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு மாணவர்களின் விடுதிகளுக்கும் முன்பாக ஒரு கோவில் உள்ளது. அங்கு ஒரு புத்தர் சிலை கடவுளாக இருந்தி வைக்கப்பட்டுள்ளது. இக் கோயில்கள் ஒவ்வொன்றும் விதவிதமான கலைத்து வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. மாணவர்கள் கற்பது மட்டுமல்ல தியானம் செய்வதற்கான வசதிகளும் இருந்துள்ளன. இவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு கனத்த மனதுடன் வெளியேறினோம். இந்த இடத்திற்கு மீண்டும் ஒரு தரம் வந்தி சில நாட்கள் தங்கி நின்று ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

img_041112ம் நூற்றாண்டுகளின் பின்பு மத்திய கிழக்கிலிருந்து படையெடுத்து தென்னாசிய நாடுகளை (இன்றைய இந்தியா) மொகாலைய அரசர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் நாலந்தா மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொன்றும் விரட்டியுமுள்ளனர்.  சிலர் தப்பிச் சென்றுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன. இறுதியாக இந்த மாபெரும் பல்கலைக்கழத்தையும் அதன் பிரமாண்டமான நூலகத்தையும் எரிந்து அழித்ததாக வரலாறு கூறுகின்றது. இதேநேரம் இந்து மதத்தின் எழுச்சியும் இந்தியாவில் பௌத்தம் மதமும் அது தொடர்பான கற்கைகளும் அழிந்து போனமைக்கும் காரணமாகின என்கின்றார்கள்.

img_0398நூலகங்களை எரிப்பது என்பது வரலாற்றில் பல கால கட்டங்களில் நடந்துள்ளது. தமது நம்பிக்கைகளுக்கு எதிரான தகவல் களஞ்சியங்களை சேகரிப்புகளை ஆதிக்க சக்தியினர் அழித்தது வரலாறு. இது தொடர்பாக The Name of the Rose என்ற திரைப்படம் நல்லொரு காவியம்.  நமது காலத்தில் சிறி லங்கா அரசினால் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டது யாழ்.நூலகம்.  உண்மையில் இனவாத சிங்கள பௌத்தர்கள் எரித்த தமிழ் நூலகம். இது தொடர்பாக சோமிதரனும் ஒரு விபரணப் படத்தை (click here to watch it) தயாரித்திருக்கின்றார். இதேபோல உலகத்தில் முக்கியமான நூலகமாக இருந்த நாலந்தா பௌத்த நூலகமும் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மொகாலைய பேரரசர்களினால் எரிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.img_0380 இந்த வரலாற்றிலிருந்து இன்றுவரை சிங்கள பௌத்தர்கள் பாடம் கற்கவில்லை என்பதையே இன்றை சம்பவங்களும் கூறுகின்றன. இனிமேலும் கற்பார்களா என்பது சந்தேகமே. அவர்களைப் பொறுத்தவரை புலிகளே பிரச்சனைக்கு காரணம். அவர்களை அழித்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைத்தார்கள். ஆனால் பிரச்சனை இன்றும் தொடர்கின்றது. உண்மையில் தமிழின அழிப்புக்கும் புறக்கணிப்புக்கும் முக்கிய காரண கர்த்தாக்கள் ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திர கட்சியும். இவர்களை அழித்தாலே பிரச்சனையைத் தீர்க்கலாம் என்பதை சிங்கள பௌத்தர்கள் எப்பொழுது உணர்வார்களே?.

for reference to read it in English
https://nalandauniversity.wordpress.com/about/

reference 2- Nalanda guide book

 

Advertisements

3 thoughts on “நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்களில் ஒன்று

  1. Pingback: போதிகாயா முதல் குசிநகர்வரை : சித்தாத்தர் நடந்த பாதைகளில்…. பகுதி இரண்டு | a journey towards sun/சூரியனை நோக

  2. Pingback: போதிகாயா முதல் குசிநகர்வரை : சித்தாத்தர் நடந்த பாதைகளில்…. பகுதி இரண்டு | a journey towards sun/சூரியனை நோக

  3. Pingback: போதிகாயா முதல் குசிநகர்வரை : சித்தாத்தர் நடந்த பாதைகளில்…. பகுதி இரண்டு | a journey towards sun/சூரியனை நோக

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s