போதிகாயா: புத்தரின் காலடிகளில்…

img_0002போதிகாயா: புத்தரின் காலடிகளில்… முதல் நாள்

நான் ஒரு பௌத்தன் அல்ல…
சிறுவயதிலிருந்து பௌத்தத்தை வெறுத்தவன்.

இதற்கு காரணம் நான் வளர்ந்த சமூகம்.

நான் ஒரு  கடவுளையும் நம்புவதில்லை…

கடவுள் இல்லை என்பதையும் நம்புவதில்லை

இரண்டும் நம்பிக்கைகளே!

புத்தரும் எனது கடவுள் அல்ல

புத்தர் ஒரு கடவுளே அல்ல என அவரே கூறியுள்ளார்.

புத்தர் தொடர்பாக எனது பார்வையை மாற்றயவர் ஓசோ.

புத்தரின் வழி ஒரு புதிய மனிதரை உருவாக்குவதற்கானது

புதிய வாழ்வு முறைக்கானதுimg_0012

……..

பஞ்சாப்பின் அமிர்தராசிலிருந்து 24 மணித்தியாலங்கள் புகையிரதத்தில் பயணம் செய்து கயாவிற்கு காலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்தோம். புகையிரத்த்தை விட்டு இறங்கியவுடனையே நம்மைச் சுற்றி சுமை தூக்குகின்றவர்கள் அல்ல. ஆட்டோ சாரதிகள் சூழ்ந்து கொண்டார்கள். ஒருவர் மட்டும் நியாயமான பணத்தைக் கூறினார்.  அவருடன் இங்கிருந்து  போதிகாயாவிற்கு பயணமானோம்.

காயா மற்றும் போதிகாயா வழமையான இந்திய நகரங்களைப் போல குப்பைகளும் குட்டைகளும் தூசிகளும் நிறைந்து காணப்பட்டன.  மேலும் இம் முறை நாம் சென்ற இந்திய நகரங்களில் எல்லாம் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளும் மீள் நிர்மாணப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது அதிகளவான தூசிகளை உருவாக்கி நம்மைக் கஸ்டப்படுத்தியது. இம் முறை நாம் தங்குதவற்கு முன்கூட்டிய பதிவுகள் ஒன்றும் செய்யவில்லை. காலையில் ஒரு கடையைத் தேடி உணவருந்திவிட்டு இருப்பதற்கான அறையைத் தேடினோம். அருகிலையே மலிவாக ஒரு இடம் கிடைத்தது.  நல்ல தண்ணீர் வர நன்றாக குளித்துவிட்டு போதிகாயாவிற்கு சென்றோம்.

img_0014போதிகாயாவிற்குள் பாதணிகள், தொலைபேசிகள், தோற்பைகள் என எதையும் கொண்டு போக முடியாது.  அதற்கமைய இலவசமாக சில இடங்களை வைத்திருக்கின்றார்கள். அதில் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லலாம். இராணுவம் பொலிஸ் எனப் பல பாதுகாப்புகள் சோதனைகள். அனைத்தையும் கடந்து கௌதம சித்தாத்தர் தன்னைக் கண்டவைதற்காக அலைந்து திரிந்த இடங்கள், தியானம் செய்த இடங்கள், அவர் தன்னை அறிந்த இடம் அதாவது முக்தி பெற்ற இடம் என்பவற்றைப் பார்த்தோம். பல நாட்டு மக்கள் வருகை தந்து அந்த இடங்களில் தியானம் செய்கின்றார்கள். புத்தமதம் பின்பற்றப்படுகின்ற ஒவ்வொரு நாட்டினரும் தமக்கான ஒரு புத்த கோயிலையும் மடத்தையும் தம் நாட்டு கட்டிட அழகியல் வேலைப்பாடுகளுடன் போதிகாயாவைச் சுற்றி கட்டியுள்ளார்கள். ஒரே இடத்திலையே பல பௌத்த நாடுகளின் கட்டிடக் கலைகளையும் மத பழக்கவழக்கங்களையும் பார்ப்பதுடன் உணவுகளையும் உண்ணலாம்.

img_9955குறிப்பாக சிறிலங்கா மக்கள் பலர் வருகின்றார்கள்.  இவர்கள் வருவது மட்டுமல்ல இங்குள்ள மக்களிடம் குறிப்பிடத் தக்களவு தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அவதானிக்க முடிந்தது. பல போதிகாயா மனிதர்கள் குறிப்பாக இளைஞர்கள் சிங்கள மொழியை சிங்களவர்கள் போல மிகச் சாதாரணமாக உரையாற்றுவதைக் காணக் கூடியதாக இருந்தது.  இதற்கு அநாகரிக தர்மபாலாவினால் உருவாக்கபட்ட சிறிலங்கா சிங்கள பௌத்த மடம் முக்கியமான காரணமாகும். இதனுடாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். ஒரு காலத்தில் அநாகரிக தர்மபலாவின் தலைமையில் இந்த இடத்தை தம் கைவசப்படுத்த முயற்சித்ததாகவும் ஆனால் அது சாத்தியமற்றுப் போனதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் சிங்களம் பேசிய போதிகாயா (முன்பு ரூவலா) மனிதர் ஒருவர் “இது குட்டிச் சிறிலங்கா” என குறிப்பிட்டார். img_9960இவர்களுக்கு இலங்கையில்  உள்ள சகல சிங்கள இடங்களின் பெயர்களும் நினைவிலுள்ளன. ஆனால்  தவறிக்கூட தமிழ் பிரதேசங்களின் பெயர்களைச் சொல்லவில்லை. நாம் சில பெயர்களைக் குறிப்பிட்டு இதுவும் சிறிலங்காவில் தான் இருக்கின்றது எனக் கூற அப்படி இருக்க முடியாது என வாதிட்டார்கள். இவர்களுக்கு சிங்களம் கற்பித்தவர் ஒரு சிங்கள பௌத்த சாது. இவர் நன்றாக சிங்களத்தை மட்டும் கற்பிக்கவில்லை.  தமிழர்களை மறைத்து சிங்கள மேலான்மையையும் கற்பித்திருக்கின்றார் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.

img_0061இரவு மின்சார வெளிச்சங்களால் அழங்கரிக்கப்பட்ட  போதிகாயா கோயிலை மீளப் பார்த்தோம்.  பின் கனேடியப் பெண் ஒருவர் நடாத்துகின்ற சிறிய கடை ஒன்றில்  பீட்சா ஒன்றை வாங்கிச் சாப்பிட்டோம். அப்பொழுது இரண்டு சிறுவர்கள் நம்மை விசாரித்தார்கள். நமது மதம் எதுவெனக் கேட்டார்கள். நாம் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை எனக் கூறினோம். அவர்கள் தாம் இருவரும் குறிப்பிட்ட மதப் பின்னனியைச் சேர்ந்தவர்கள். ஆனால் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. மாறாக அனைத்து மதங்களிலுமுள்ள நேர்மறையான விடயங்களை உள்வாங்கி அதைப் பின்பற்றுகின்றோம். நம்மை அறிவதுதான் முக்கியமானது என்றார்கள். அதில் ஒரு சிறுவன் தொடர்பாக மற்ற சிறுவன் கூறினான். இவனது தகப்பனார் வேறு ஒரு திருமணம் செய்து சென்றுவிட்டார். இவனுக்கு அக்கா தம்பி தங்கைகள் உண்டு. அம்மாவையும் சகோதரங்களையும் இவன்தான் உழைத்துப் பார்க்கின்றான். இவனது அம்மா இவனைப் பள்ளிக்கூடம் போ என்று சொன்னாலும் போக மாட்டான். இவனது ஒரே இலட்சியம் சீன மொழியில் பாண்டித்தியம் பெறுவது மட்டுமே. அதை மட்டுமே தொடர்ந்து கற்கின்றார். சீன உல்லாசப் பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படுகின்றார். இச் சிறுவன் தனது முயற்சிக்கு ஆதர்சமாக அப்பில் நிறுவனத்தின் ஸ்டிவ் யொப்பையும் முகநூல் நிறுவனரின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டான். மற்ற சிறுவன் தான் ஆன்மீகத்திலையே முழுக் கவனத்தையும் செலுத்துவதாக கூறினான். இருவரும் மாறி மாறி ஒருவரை தமது குருவாக கூறினார்கள். மற்றவர்களின் ஆற்றல்களைப் புகழ்ந்தார்கள். இவர்களை வெறுமனே வியாபாரிகளாக மட்டும் பார்க்க முடியவில்லை. அவர்களின் பண்பில் உறுதியில் எதிர்காலத்தில் ஒளிவிசும் நட்சத்திரங்களாக வருவார்கள் என உள்ளுணர்வு கூறியது. ஒருவரின் வயது 14. மற்றவரின் வயது இருபதுக்குள். என்னை வியப்பில் ஆழ்த்தியவர்கள்.

புத்தரின் காலடிகளில்… இரண்டாம் நாள்

img_9971இன்று அதிகாலையில் எழுந்து போதிகாயாவிற்கு சென்று தியானம் செய்ய விரும்பினேன். ஆனால் முடியவில்லை. ஒன்பது மணிபோல காலை சாப்பாட்டை சாப்பட்டுவிட்டு சென்றோம். ஒரு மணித்தியாலமளவில் அரச (போதி) மரத்தின் கீழ் இருந்து தியானம் செய்தோம். இந்த அரச மரம் புத்தர் தியானம் செய்த அதே மரம் அல்ல. உண்மையான மரத்தின் ஒரு கிளை இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நடப்பட்டது. இங்குள்ள மரத்தை இந்திய  மண்ணை ஆக்கிரமித்தவர்கள் வெட்டி விட்டார்கள். ஆகவே இலங்கையிலிருக்கின்ற மரத்தின் ஒரு கிளையை கொண்டுவந்து மீண்டும் இங்கு நட்டு வளர்த்துள்ளார்கள். அதன் கீழையே அன்று புத்தர் தியானம் இருந்து முக்தி அடைந்த்தாக நம்பி வணங்குகின்றார்கள். இக் கோயிலை பல ஆக்கிரமிப்பாளர்கள் பல முறை இடித்தும் பராமரிக்காமல் கைவிட்டும் உள்ளார்கள். ஆகவே ஒவ்வொரு காலத்தில் இதைப் பல நாட்டு அரசர்கள் புனரமைப்பு செய்துள்ளார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் இலங்கையை ஆண்ட மன்னர்கள். இவர்களின் பெயர்கள் தமிழ் பெயர்களாக இருப்பது கவனிக்கத்தக்கது.

img_0065மாலை புத்தர் போதி காயாவிற்கு வரும் வழியில் பால் கொடுத்து வரவேற்ற சுஜாதா என்பவர் வாழ்ந்த இடத்திற்கு நிரஞ்சனா ஆற்றைக் கடந்து  சென்றோம். அகண்ட ஆறு வற்றி சிறு ஓடையாக ஓட தண்ணீர் ஓடாத இடத்தில் சிறுவர்கள் விளையாடுகின்றார்கள்.  நாம் சென்ற இடத்தில் சிறு கோயில் ஒன்று உள்ளது. அங்கு புத்தருக்கு சுஜாத்தா பால் சோறு கொடுப்பது போன்ற சிலை ஒன்றுள்ளது. இக் கோயிலைச் சுற்றி வறிய மக்கள் வாழ்கின்றார்கள். ஏழைச் சிறுவர்கள்  கோயிலடியில் விளையாடுகின்றார்கள்.

மேற்குலகிற்கு சோக்கிரட்டிஸ் என்றால் கிழக்குலகிற்கு கௌதம சித்தாத்தர் (புத்தர்) எனலாம். இவர்கள் எனது இரு கண்களைப் போன்றவர்கள். ஒருவர் இடது கண்ணுக்குச் சொந்தக்கார்ர். வெளி உலகை எவ்வாறு பார்ப்பது ஆராய்வது என்பதைக் கூறியவர். அதனுடாக புற மற்றும் அக உலகை மாற்ற முயற்சித்தவர். மற்றவர் எனது வலது கண்ணுக்குச் சொந்தக்காரர். இவர் அக உலகை எவ்வாறு பார்ப்பது ஆராய்வது என்பதைக் கூறியவர். அதனை மாற்றுவதனுடாக எவ்வாறு புற உலகை மாற்றலாம் என வழி கூறியவர். இவர்கள் காட்டிய வழியில் பயணிப்பதே எனது பயணம். நான் முன்னெடுக்கும் பாதை. எதிர்காலத்தில் இவர்கள் இணைவரும் இணைந்த பயணமே மானுட வளர்ச்சிக்கும் சமூக மாற்றத்திற்கும் வழிகாட்டியாக இருக்கும் என நம்புகின்றேன். இன்று இப் பாதையில் ஒரு :கண்ணாக கார்ல் மார்க்சும் மறு கண்ணாக ஓசோவும் இருக்கின்றார்கள். நான் எந்த மதத்தையும் சேராதவன். மதங்களின் பாதை img_0063ஒருவழிப் பாதை. ஆபத்தான பாதை. வார்த்தைகளுக்குள் மட்டும் சிறைப் படுத்தப்பட்ட பாதை. இந்த வார்த்தைகளை விளங்காமல் ஆனால்  மீள மீள பாடமாக்கி ஒப்பிவிக்கின்ற பாதை. அதாவது மந்தைக் கூட்டங்களை உருவாக்கின்ற பாதை. கடவுள் மீதான நம்பிக்கையும் கடவுள் மறுப்பாளரின் நம்பிக்கையும் ஒன்றே. உண்மையை அறிவதற்கு நாம் இந்த நம்பிக்கைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். ஆகவேதான் எனக்கு கடவுள் மீது மட்டுமல்ல எதன் மீதும் நம்பிக்கையில்லை. அனைத்தும் முன்மதிப்பீடற்ற ஆழமான ஆய்வுக்கும் பார்வைக்கும் உரியவை என உணர்பவன். நமது பார்வைகள் பன்முகதன்மையாக விரியவேண்டும். அதுவே நம்மை உண்மைக்கு அருகில் கொண்டு செல்லும்.

img_0078இங்கு இரண்டு நூல்களை வாங்கினேன். இரண்டும் புத்தரின் வரலாறுகளை கூறும் நூல். ஒன்று மேற்குலகின் எழுத்தாளர் ஹேமன் ஹேசஸ் எழுதிய புத்தகம். இரண்டாவது கிழக்குலகின் சிந்தனையாளர் ராகுல் சங்கிருத்தியான் எழுதிய புத்தகம். இரண்டும் இருவிதமான பார்வைகளைத் தரும் என நம்புகின்றேன்.

இனி புத்தரின் காலடிகள் நடந்த இடங்களை நோக்கிப் பயணிக்கப் போகின்றோம்.img_0055

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s