இத்தாலியில் இலங்கைப் பெண்

IMG_6554இன்று இத்தாலியின் தஸ்கான் மாகாணத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறிய பழைய நகரான சியான பஸ் நிலையத்தில் காத்திருந்தோம். ஒரு பெண் எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு வந்தார். அவரது தோல் எங்களின் நிறமாகவே இருந்தது. அவரைப் பார்ப்பதற்கும் இலங்கையர் போல இருந்தார்.

நீங்களும் இலங்கையா எனக் கேட்டோம்.

அவர் ஆம் என்றார்.

நாமும் இலங்கை என்றோம்.

நீங்கள் இலங்கையில் எவடம் என்று கேட்டோம். அவரும் கேட்டார்.

எங்கட வீட்டிற்கு வாங்கோவன். சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றார்.

இல்ல பஸ்சிற்கு காத்து நிற்கின்றோம். நாளைக்கு விமானமும் ஏற வேண்டும் என்றோம்.

நீங்கள் இத்தாலி வந்து கன காலமோ என்றோம்.

இருபது வருடங்கள் ஆகிவிட்டது…. ஒரு மகனும் மகளும் இருக்கின்றார்கள் … இங்கு பிறந்து வளர்ந்தவர்கள்…

இப்படியே வந்து எங்களுடன் தங்கிவிட்டு செல்லுங்களேன் எனத் தொடர்ந்தார்.

எங்களுக்கு வர விருப்பம் தான். ஆனால் நாளைக்கு விமானம் ஏற வேண்டும் அதுதான் யோசிக்கின்றோம் என்றோம்.

எப்ப கடைசியாக இலங்கைக்குப் போனீர்கள் எனக் கேட்டோம்.

IMG_6558.JPGஎங்கே போவது. இஞ்ச ஒரு வீட்டில வேலை செய்கின்றேன். நிறைய வேலை. கொஞ்ச சம்பளம். இலங்கைக்குப் போவதற்கு வருமானம் காணாது. கணவரின் குடும்பமும் சரியில்லை… நான் தனியத்தான் பிள்ளைகளையும் வளர்த்து குடும்பத்தப் பார்க்கின்றேன்.

சரி நீங்கள் இப்படியே என்னுடன் வீட்ட வாங்கோவன். சாப்பிட்டு ஒரு நாள் தங்கிவிட்டு எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று தொடர்ந்தார்.

ம்…. உண்மையில் நீங்கள் எங்களை அழைத்தது மிகவும் மகிழ்ச்சி. உங்களுடன் வரமுடியாதமை வருத்தமாக உள்ளது. கோவிக்காதீர்கள் என்றோம்.  அவரது அழைப்பை மறுப்பதற்கு எங்களுக்கு கஸ்டமாகப் ோய்விட்டது.

எனக்கு புகையிரதத்திற்கு நேரமாகவிட்டது. எனது தொலைபேசியைத் தருகின்றேன். எப்ப வேண்டுமானாலும் அழைத்துவிட்டு வாருங்கள் என்றார்.

அவருடன் சென்று அவரைப் புகையிரதத்தில் ஏற்றிவிட்டு தொலைபேசி இலக்கத்தையும் வாங்கிக் கொண்டு வந்தோம்.

நமது பஸ்சும் வர ஏறி ரோமுக்கு மாலை போல வந்தோம். நமது தங்குமிடத்தை தேடிச் சென்றோம். நமது பெயரை விசாரித்துவிட்டு நீங்கள் நாளைக்கு அல்லவா பதிவு செய்திருக்கின்றீர்கள் என்றார் உரிமையாளப் பெண்.

இல்லை எங்களுக்கு நாளைக்கு விமானம் ஏறவேண்டும். இன்றுதான் பதிவு செய்தோம் என்றோம்.

இன்று 29ம் திகதி. நாளை 30ம் திகதிக்குத்தான் பதிவு செய்திருக்கின்றீர்கள் என்றார்.

நமக்கு குழப்பம் உண்டாகியது. மீண்டும் நாம் விமானம் ஏறும் திகதியை உறுதி செய்தோம். அது 31ம் திகதி என்று இருந்தது. அப்பொழுதுதான் எங்களுக்கு ஒரு விடயம் புரிந்தது. வழமையாக இடங்களைப் பதிவு செய்தும் பொழுது வெளியேறும் நாளைக் குறிப்பிட வேண்டும். கடைசியாக தங்கிய இடத்திலிருந்து 29ம் திகதி வெளியேற வேண்டும் எனப் பதிவு செய்தோம். ஆகவே 30ம் திகதிக்கு நமது அடுத்த தங்குமிடத்தைப் பதிவு செய்தோம். ஆனால் நமது மனதில் இன்றும் 30ம் திகதி எனப் பதியப்பட்டுவிட்டது. தூரதிர்ஸ்டவசமாக இருவரும் அவ்வாறே நினைத்துக் கொண்டே பயணித்தோம். ஆனால் உண்மையில் இன்று 29ம் திகதி. நாம் தங்குவதற்கு ஒரு இடத்தையும் பதிவு செய்யவில்லை. நமது நல்ல நேரத்திற்கு அவரிடம் ஒரு வெற்றிடமிருக்க அதை நாம் தங்குவதற்கு தந்தார்.

IMG_6572.JPGஇப்பொழுது நாம் சந்தித்த பெண் நம்மை அழைத்ததை நினைத்துக் கொண்டோம். அவர் உண்மையான நட்புணர்வில் அழைத்திருக்கலாம். தனிமையில் இருப்பதால் அழைத்திருக்கலாம். மன நோயாளராகவும் இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் நமது மனதின் எண்ணங்களே. அவரைப் பற்றிய மதிப்பீடுகளே.

இது இயற்கை நமக்கு தந்த அழைப்பா?

நமது மறுப்பு இயற்கை அளித்த புதிய அனுபவங்களுக்கு தடையாகிவிட்டது.

இப்படித்தான் இயற்கையின் அழைப்பை பல நேரங்களில் நம் மனதின் எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கத்தால் தட்டிக் கழித்து விடுகின்றோம்.

அவர் ஒரு சிங்களப் பெண். களனியைப் சேர்ந்தவர். நாம் அவருடன் சிங்களத்திலையே உரையாடினோம். இங்கு இவரைப் போல பல இலங்கைப் பெண்கள் வீடுகளில் பணி செய்கின்றார்கள். கஸ்டமான பணி. குறைவான ஊதியம்.

ஆனால் பெயர் வெளிநாட்டு வாழ்வு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s