18 நாட்கள்: மொரோக்கோ – மதினாக்களின் நாடு.

18 நாட்கள்: மொரோக்கோ – மதினாக்களின் நாடு.

தொலைந்துபோக…

IMG_2305நமது பயணத்தில் சென்ற மூன்றாவது நாடு மொரோக்கோ. இந்த நாடு இரண்டு வகையில் எங்களுக்கு முக்கியமானது. முதலாவது ஆபிரிக்க கண்டத்திலுள்ள ஒரு நாட்டிற்கு முதன் முதலாக செல்கின்றோம். இரண்டாவது இதுவே  நாம் செல்கின்ற முதல் முஸ்லிம் நாடுமாகும். இந்த நாட்டின் பழங்குடி மக்கள் பாபர் (Berber) என்ற மனிதர்கள். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இயற்கையுடன் வாழ்ந்த இந்த மக்களையும்  நாட்டையும் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முதல் ரோமர்கள் ஆக்கிரமித்து ஆண்டார்கள். வரலாறு எழுதும் மேற்குலகினர் ரோமர்கள் பிற்காலங்களில் இந்த நாட்டை விட்டு விட்டுச் சென்றதாகவும் முஸ்லிம்கள் பின் ஆக்கிரமித்ததாகவும் எழுதுகின்றார்கள். இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களோ பாபர்கள் கடவுளின் தூதர்களை எதிர்பார்த்திருந்தாகவும் முஸ்லிம்கள் வந்தபின் இஸ்லாமே தமது மதம் என உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறுதான் வரலாறு என்பது ஆதிக்கத்திலிருப்பவர்களின் வரலாறாகவே உள்ளது. ஆனால் வரலாறுகளை எழுதும் பெரும்பாலானவர்கள் இன்னுமொரு நாட்டை தமது நாட்டினிர் மதத்தினர் ஆக்கிரமித்து ஆண்டார்கள் என்ற உண்மையைக் கூறுவதுமில்லை. ஏற்றுக்கொள்வதுமில்லை. ஆரம்பகால பாபர்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்களின் வருகையை எப்படிப் பார்த்தார்கள் என ஒருவரும் கூறுவதில்லை. இதுவே வரலாறுகளின் தூரதிர்ஸ்டம். இப்பொழுதும் இவர்களில் பெரும்பாலானவர்கள் காடுகளிலும் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தே வாழ்கின்றனர்.

IMG_1058இந்த நாட்டை அரேபியர்கள் 9ம் நூற்றாண்டில் ஆக்கிரமித்தபின் முதல் மதீனா 10ம் நூற்றாண்டில் வெஸ்சில் (Fes/Fez) கட்ட ஆரம்பிக்கப்பட்டு 15ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது கட்டி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மொரோக்கோவின் பல நகரங்களில் மதீனாக்கள் கட்டப்பட்டன. இன்று மொரோக்கோ பல மதீனாக்களைக் கொண்ட ஒரு நாடு. தான்ஜீர் (Tangier). செவ்செவ்வோன்(Chefchaouen). வெஸ் (Fez). மரகாஸ் (Marrakesh) மற்றும் பல நகரங்களிலும் பெரிய சிறிய மதீனாக்கள் உள்ளன. தொலைந்து போக விருப்பமானவர்களுக்கும்  தொலையாமல் இருப்பதற்கான சவாலை எதிர்கொள்பவர்களும் பயணிக்க வேண்டிய நகரங்கள் இவை. ஏனெனில் இந்த மதினாக்கள் திட்டமிட்டு கட்டப்பட்டவையல்ல. மதினாக்களின்  மத்தியில் கஸ்பா அல்லது ரியாட் ஒன்று முதன் முதலாக கட்டப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்து தமது தேவைக்கும் விருப்பத்திற்கும் புதிதாக குடியேறியவர்கள் சிறிய கஸ்பாக்களையும் சிறிய பெரிய ரியாட்களையும் கட்டியுள்ளார்கள். வெளியிலிருந்து பார்க்கும் பொழுது சிறிய வீடுகளாக இருக்கும். ஆனால் உள்ளே சென்றால் அழகிய வேலைப்பாடுகளுடன் பெரிய நாற்சதுர வீடுகளாக இருக்கும். கஸ்பா என்பது ஒரு குடும்பத்திற்குரியது. நான்கு கோபுரங்களைக் கொண்ட நாற் சதுர வீட்டின் ஒவ்வொரு கோபுரத்திலும் ஒரு மனைவியார் என மொத்தமாக நான்கு மனைவிமார் வசிக்கலாம். ரீயாட் என்பது கொஞ்சம் பெரியதும் வசதியானதுமாகும். சிலவற்றில் நடுவில் நீந்திக் குளிப்பதற்கான வசதிகளும் பூந்தோட்டங்களும் உள்ளன.

IMG_0711இந்த வசிப்பிடங்களுக்கான வீதிகள் மிகவும் குறுகியவையாகவும் சுற்றிச் சுற்றி செல்பவையாகவும் திடிரென்று முடிபவையாகவும் இருக்கும். இக் குறுகிய வீதிகளின் மேலாலும் வீடுகள் விஸ்தரிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கும். ஆகவே பல இடங்களில் இக் குறுகிய வீதிகள் இருட்டாக இருக்கும். சில  சந்திகளில் மட்டுமே வெளிச்சங்கள் உள்ளன. ஆகவே இதனுடாக நடந்து திரிவதற்கு ஒரு மனப்பயம் தயக்கம் உள்ளது. இந்த மதீனாக்களைச் சுற்றி உயரமான பெரிய சுவர்கள் கட்டப்படிருக்கின்றன. ஒவ்வொரு மதீனாக்களுக்கும் பல வாசல்கள் இருக்கின்றன. இவை முக்கியமான சந்திகள். அடையாளங்கள். இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி செல்லும் குறுகிய பாதையால் தொடர்ந்து சென்றால் எதாவது ஒரு வாசலை அடையலாம். காலை வேளைகளில் ஒரு வாசலினுடாகப் பயணித்து மீண்டும் அதே வீதியால் வருவது என்பது மிகவும் சவாலான விடயம்.IMG_1031 ஏனெனில் பத்து மணியின் பின் பல கடைகளை திறக்கப்பட்டு புதிய பாதையாக காட்சியளிக்கும். மீள வருவதற்கு நாம் வைத்திருந்த குறிப்புகளை கண்டுபிடிப்பது மிகவும் கஸ்டமானதாக இருக்கும். இப்படி காலை மதியம் மாலை இரவு என ஒவ்வொரு நேரத்திற்கும் வித்தியாசமான ;தோற்றத்தை தருபவையாக இந்த் மதீனாக்கள் இருக்கின்றன. இதற்குள் கார்கள்  தடை  செய்யப்பட்டுள்ளன. தள்ளு வண்டில்களும் கழுதைகளும் மட்டுமே; பயன்படுத்தப்படுகின்றன. பல இடங்களில் நீர் விநியோக தாங்கிகள் அழகாக கட்டப்பட்டு நீர்ப்பாசனத் திட்டம் சிறப்பாக செயற்படுத்தப்படுகின்றது. இதிலிருந்து வரும் நீரையே அனைவரும் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகின்றனர்.

IMG_1177

குடிநீர்

பல மாற்றங்கள் இவர்கள் வாழ்வில் ஏற்பட்டபோதும் இன்னும் பழங்கால நடைமுறை வாழ்வுடன் குறிப்பாக மதீனாக்களின் உள்ளே  வாழ்கின்றார்கள். பார்பர்களின் தான்ஜீர் (tagine) உணவு வகைகளே பிரபல்யமாக இருக்கின்றன. இதைவிட இனிப்பு பண்டங்களும் மாலை நேரத்தில் வீதியோரத்தில் பெண்கள் விற்கின்ற தோசை ரொட்டி போன்ற உணவு பிரபல்யமானவை. அதேநேரம் கடந்த கால வாழ்வுமுறைகள் இன்று வெறுமனே சான்றுகளாக மட்டுமே உள்ளன. உதாரணத்திற்கு முன்பு இவர்களின் வீடுகளில் இரண்டு விதமான அழைப்பு மணிகள் உள்ளன. ஒன்று குடும்பத்தாருக்கு. மற்றது வெளியாருக்கு. இந்த அழைப்பு மணியின் ஒலிக்கு ஏற்ப வீட்டினுள் இருக்கின்ற பெண்கள் உள்ளறைகளுக்குச் செல்வார்கள். அல்லது அப்படியே இருப்பார்கள். இந்த அழைப்பு மணி உள்ள கதவுகள் இன்றும் உள்ளன. ஆனால் யாரும் பயன்படுத்துவதில்லை.

IMG_1142இந்த நாடு பிற்காலங்களில் ஸ்பானியர்களாலும் பிரான்சினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு 1956ம் ஆண்டு  விடுதலையடைந்தது. அராபிய மொழி உத்தியோக பூர்வ மொழியாகப பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும் பிரஞ்சு மொழியைப் பெரும்பாலானவர்கள் சாராளமாகப் பேச சிலர் ஸ்பானிய மொழியையும் பேசுகின்றார்கள். இந்த மூன்று மொழியும் தெரியாமல் இந்த நாட்டில் பயணிப்பது என்பது கொஞ்சம் கஸ்டமான காரியம். ஏனெனில் ஆங்கிலம் பேசுகின்றவர்கள் மிக மிகக் குறைவு.

IMG_1077இன்று ஒரு மொரோக்கோ பிரஜையாக இருப்பதற்கு முஸ்லிமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த நாட்டில் சக மத பிரஜைகளாக யூதர்கள் மட்டுமே இருக்கின்றனர்.  மற்றும் படி எந்த சக மதத்தினரும் பிரஜைகளாக முடியாது என்கின்றது சட்டம் எனக் கூறுகின்றார்கள். இந்த நகரங்களில் பல திசைகளில் இருக்கின்ற பல பள்ளிவாசல்களில் இருந்து ஐந்து தொழுகைக்கான நேரங்களின் போதும் ஒரே நேரத்தில் பாங் ஒலி கேட்கும். இதுவே இது ஒரு முஸ்லிம் நாடு என்பதை பறைசாட்டிக் கொண்டிருக்கும்.

IMG_2294பயணத்தின்போது பாதுகாப்பாக பயணிக்கலாம். அதிகம் பிரச்சனையில்லை;.  பெண்கள் தனியாக பயணிப்பது கொஞ்சம் கஸ்டம். கவனமாகப் பயணிக்க வேண்டும். முடிந்தளவு அதிக மனிதர்கள் கூட்டமாக இருக்கின்ற இடங்களில் சுற்றித் திரிவது நல்லதும் பாதுகாப்பானதுமாகும். இருப்பினும் சில பெண்கள் தனியாகச் சுற்றித் திரிகின்றார்கள்.

உல்லாசப் பயணிகள் என அடையாளம் கண்டால் பலர் பல சமான்களை விற் ஓடிவருவார்கள். சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை மதீனாக்களை சுற்றிக் காட்ட முன்வருவார்கள். தாம் உதவி செய்ய விரும்புவதாக கூறுவார்கள். நாம் வழியைத் தவறவிட்டவர்கள் என அறிந்தால் தாம் வழிகாட்டுவதற்கு முண்டியடிப்பார்கள். இவர்களது உதவியை ஏற்றுக் கொண்டு சென்றால் இறுதியில் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும். ஆகவே ஆரம்பத்திலையே கேட்பதற்கு நன்றி எனக் கூறி  தவிர்த்துவிட வேண்டும். முதல் முறை ‘சுக்கிரான்’ என நன்றி தெரிவிக்கலாம். அல்லது இன்னும் உறுதியாக கூறுவதாயின் ‘லா சுக்கிரா’ சொன்னால் மீளவும் கேட்கமாட்டார்கள். மேலும் குறிப்பாக  பாலைவனங்கள் அல்லது நகரை அல்லது மதீனாவைச் சுற்றிப் பார்க்க யாரையாவது நியமித்தால்  அவர்களுடன் தெளிவான உடன்பாட்டிற்கு எழுத்து மூலம் வாருங்கள். மேலும் அவர்கள் கூறுகின்ற பணத்திலிருந்து ஒன்றில் மூன்று பங்கை கேட்கலாம். அரைவாசிக்கு கூட செல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த பதிவில் மொரோக்கோவின் ஒவ்வொரு நகரங்களிலும் நாம் பெற்ற அனுபவங்களை எழுத முயற்சிக்கின்றோம்.IMG_2124

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s