அவளது எண்ணங்களும் அவனது எழுத்துக்களும்

அவளது எண்ணங்களும் அவனது எழுத்துக்களும்

ஒரு வருடத்திற்கான இந்தப் பயணத்தின் பதிவுகளில் மீராபாரதியின் கருத்துகள் மற்றும் அனுபவங்கள் மட்டும் பதிவுசெய்யவில்லை. மாறாக shirleyயினுடைய கருத்துகளும் அனுபவங்களும் இணைந்தே பதிவு செய்யப்படும். மேலும் இப் பயணத்திற்கான தயாரிப்பில் shirleyயின் பங்களிப்பே பெரும்பான்மையானது. ஆகவே மீராபாரதிக்குத் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்பதனால் shirleyயின் கருத்துகளையும் அனுபவங்களையும் பாரதி அபகரிக்க கூடாது. அவ்வாறு நடைபெறுவதை தவிர்க்கும் முயற்சியே இது. ஏற்கனவே ஒரு ஆணாக பாரதி சமூகத்தில் தனக்கு கிடைத்த சலுகைகளினுடாக அறிந்தும் அறியாமலும் பல விடையங்களை அபகறித்துள்ளார். (அபகறிக்கின்றேன்). அதைத் தொடந்து செய்யக் கூடாது. ஆகவேதான் இப் பதிவுக்கு அவளது எண்ணங்களும் எனது எழுத்துக்களும் எனத் தலைப்பிட்டு பதிவு செய்கின்றோம்.
இப் பயணத்திற்காக கரு நீண்ட காலமாக நமக்குள் இருந்தது. மீராவுக்குப் பிற்காலங்களில் ஆர்வமில்லால் போனாலும் shirleyக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது. கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் அது கொழுந்துவிட்டு எரிவதை நோக்கி செயற்பட்டார். முதலாவது வேலை. இரண்டாவது வீடு. இதை இரண்டையும் சரி செய்தால் மற்றவை தானாக வழிக்கு வரும். மேலும் சில தடைகள் தவிரக்க முடியவில்லை. ஆகவே கடந்த வருடத்தின் இறுதில் செல்ல வேண்டிய பயணத்தை இந்த வருடம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கின்றோம்.

இப் பயணத்திற்கான ஆரம்ப தயாரிப்புகளில் முக்கியமானது இவ்வாறு பயணம் செய்தவர்களின் பதிவுகளை தேடி வாசித்தமை. பெரும்பான்மையான இவ்வாறான பதிவுகளை shirleyயே வாசித்து மீராவுடன் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு பதிவுகளும் புதிய புதிய தகவல்களுடன் எங்களை ஆச்சரியப்படுத்தி நம் பாதையில் வெளிச்சத்தை உருவாக்கின. இப் பதிவுகளை எழுதியவர்கள் தங்களது பயணத்தின் போது ஏற்பட்ட சிறு சிறு தகவல்களையும் அனுபவங்களையும் பதிவு செய்துள்ளனர். மேலும் இதற்கான செலவுகளை அழகாக அட்டவணைப்படுத்தியுமுள்ளனர். இவ்வாறு பயணம் செய்கின்ற பெரும்பான்மையானவர்கள் குறிப்பிட்ட துறைசார் வல்லுனர்களாக இருக்கின்றார்கள். ஆகவே சில விடயங்கள் அவர்களுக்கு இலகுவானதாக இருக்கின்றது. இந்த இணையங்களின் இணைப்புகளை நமது வலையில் பதிவு செய்கின்றோம். உதாரணத்திற்கு சில.

இவ்வாறு பல காலம் இணையாவுகம் தனியாகவும் பயணம் செய்தவர்களின் அனுபவங்கள் தனித்துவமானவை. குறிப்பாக பெண் பயணிகள் இவ்வாறு தனித்து பயணம் செய்வது எவ்வளவு கஸ்டமானதும் சவாலானதும் என்பதை அறிந்திருந்தாலும் இப் படைப்புகளினுடாக மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறான பலரின் அனுபவங்களை உள்வாங்கி நமது பயணத்தை திட்டமிட ஆரம்பித்தோம்.

முதலில் எங்கே செல்வது என்பதைத் தீர்மானிப்பதில் ஆரம்பித்தோம். shirleyயின் விருப்பம் நல்லதொரு பாலைவனத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதே. இதற்கு சகாராப் பாலைவனத்திற்குத்தான் போக வேண்டும். கடந்த முறை ராஜஸ்தான் பாலைவனத்தில் பயணம் செய்தபோது அது திருப்தியானதாக இருக்கவில்லை. அல்லது shirleyயின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகவே இம் முறை மொரோக்கோ செல்வது எனத் தீர்மானித்தார். இங்கு பயணிப்பதற்கு மொன்றியலிலிருந்து நேரடியாக விமான சேவை உள்ளது. இருப்பினும் எமக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன. ஸ்பைனுக்குச் சென்று அங்கிருந்து செல்வது. அல்லது நேரடியாக செல்வது. ஆனால் ஒரு முறை கூகில் தேடியபோது இலன்டனுக்கு ஊடாக ஸ்பையினுக்கு செல்கின்ற பயணச் செலவு மிக்க குறைவாக இருந்தது. நாம் ஏற்கனவே இலன்டனுக்கு சென்றவர்கள். ஆகவே இம் முறை முதலில் இலன்டனைத் தவிர்த்திருந்தோம். ஆனால் இவ்வளவு மலிவாகப் போக கிடைத்ததால் இலன்டனையும் நமது பயணத்தின் ஒரு இடமாகவும் முதலாவது இடமாகவும் குறித்துக் கொண்டோம். இவ்வாறு பயணிக்கும் பொழுதே அடுத்த இடத்திற்கான வீமானச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதாக திட்டமிட்டிருக்கின்றோம்.இருப்பினும் ஸ்பெயினிலிருந்து நோர்வேக்கான விமானத்திற்கும் மிக மலிவாக இணையங்களினுடாகப் பதிவு செய்துள்ளோம்.

world tour 013இவ்வாறு குறைந்த செலவில் பயணிக்கும் (charted flights) விமானங்களில் அதிகளவிலான சமான்களை கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். நாம் வழமையாக பயணம் செய்யும் பொழுது இரண்டு பொதிகளை ஒவ்வொன்றும் குறைந்தது 20கிலோவாவது இருக்கும். ஆனால் இம் முறை ஒரு பொதி (carry on bag) மட்டுமே கொண்டு செல்லலாம். அதுவும் 10 கிலோவிற்கு மேற்படக்கூடாது. இவ்வாறு பயணிப்பவர்களும் இதைத்தான் சிபார்சு செய்துள்ளனர். இது பயணத்தை இலகுவாக்கும். ஆகவே நாம் இவ்வாறான ஒரு பொதியை தேடியபோது Osprey (far point 40l) என்ற பெயருடைய பொதியே சிறந்தது என Shirley முடிவுசெய்தார். பின் அதை மலிவாக வாங்குவதற்கு http://www.altitude-sports.com/enயைப் பயன்படுத்தினார். டொரன்டோவில் உள்ள பயணங்களுக்கு சமான்கள் விற்கின்ற கடைகளைத் தேடி பொதியை பார்த்தார். பிடித்து கொண்டபின் இணையத்தினுடாக பதிவுசெய்து பெற்றுக் கொண்டோம். இப் பொதியினுள் ஒரு அறை மட்டுமே உள்ளது. ஆகவே பல்வேறு ஆடைகளையும் பொருட்களையும் பிரித்து வைப்பதற்குப் பாரமில்லாத பிரிக்கும் பைகளை வாங்கிக் கொண்டோம். மேலும் மெல்லிய விரைவாக தண்ணீரை ஊறிஞ்சிக் காயக்கூடிய தூவாய் ஒன்றையும் வாங்கிக் கொண்டோம். இவ்வாறு நமது ஆடைகளை பொதி செய்தபோதும் நாம் விரும்பியபடி பயணப்பொதியினுள் அடைக்க முடியவில்லை. Shirley இதிலுள்ள சிறிய பைகளுக்குள் தனது மெல்லிய ஆடைகளை அடுக்கிக் கொண்டார். பாரதி இதிலிருக்கின்ற பெரிய பையை கைவிட்டு சிறிய பை ஒன்றுக்கு மாற்ற வுண்டி ஏற்பட்டது. அவரால் அதிக ஆடைகளை அடுக்க முடியவில்லை.world tour 012

எவ்வளவுதான் ஆரம்ப செயற்பாடுகளை மேற்கொண்டாலும் தவறுகள் தாமதங்கள் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. நமது கடவுச்சீட்டுகளைப் புதுப்பிக்க வேண்டும். பயணம் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முதல்தான் அதற்கு விண்ணப்பித்தோம். இதனால் இந்திய மற்றும் இரஸ்சிய விசாக்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக இரஸ்சிய விசாவிற்கு மேலதிக விபரங்கள் சில தேவைப்படுகின்றன. ஆகவே பின்லாந்து அல்லது சுவிடன் இரண்டு நாடுகளிலும் இந்த விசாக்களை எடுக்கலாம் என யோசிக்கின்றோம். அது தொடர்பாக விரைவில் பதிவு செய்கின்றோம்.

இப் பயணத்திற்கான செலவுகள் பெரும் பகுதி shirleyயினுடையது என முதற்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றோம். அவர் தனது வருமானத்தில் சிறுக சிறுக சேர்த்த பணம் இது. மற்றும்படி வேறு வழிகளில் முக்கியமாக குறுக்கு வழிகளில் பணத்தை சேர்க்கவில்லை. அவ்வாறான ஒரு கதை உலாவுவதாக நேற்று ஒரு நண்பர் தெரிவித்தார். இவ்வாறு நாம் பயணிப்பது பலருக்கு ஆச்சரியமானதுதான். ஆனால் அதற்காக நாம் படும் கஸ்டம் எங்களுக்கு மட்டுமே தெரியும். இருப்பினும் சரியான வழிகளில் பணம் உழைக்கும் வழிகளை யாரும் எமக்கு சிபார்சு செய்யலாம். இந்த உலகம் பணத்தால் கட்டப்பட்டிருக்கின்றது. நாம் அதிலிருந்து விடுபட முயற்சிக்கின்றோம். நமது தேவைக்கு மட்டுமே பணத்தை உழைக்க விரும்புகின்றோம். இவ்வாறன ஒரு முயற்சியில் ஒரு இணையத்தளத்தை Shirley கண்டுபிடித்தார். (iStockPhoto, Kombu, Shareapic) அதற்கு நாம் பயணத்தின் போது எடுக்கும் படங்களை அனுப்பினால் சிறிது பணம் கிடைக்கும். இந்த முயற்சிகளை செய்யும் நோக்கமுள்ளது.

தொடர்வோம்….
நட்புடன்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s